தபால்துறையின் அலட்சியத்தால் இளம்பெண்ணின் அரசுப் பணிக்கான கனவு சிதைப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தபால் துறையினரின் அலட்சியத்தால் அரசுப்பணி வாய்ப்பை இழந்து தவிப்பதாக கண்ணீர் மல்க இளம்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தபால் துறையினரின் அலட்சியத்தால் அரசுப்பணி வாய்ப்பை இழந்து தவிப்பதாக கண்ணீர் மல்க இளம்பெண் வேதனை தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சாந்தி நகரில் வசித்து வருபவர் வித்யா (22). இருசக்கர வாகனத்தில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வரும் சோமசுந்திரம் என்பவரது மகளான இவர், தனது ஏழ்மையான நிலையிலும் சிரமப்பட்டு பி.எஸ்.சி பட்டபடிப்பை முடித்துள்ளார். அரசுப்பணியில் சேரவேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்த வித்யா தமிழக நில அளவைப் பதிவேடுகள் துறையில் காலியாக இருந்த பதிவறை எழுத்தர் பணிக்கு முறைப்படி விண்ணப்பித்துள்ளார். பணிக்கான அனைத்து தகுதிகளும் இருந்த காரணத்தினால் அவரை இப்பணிக்கான நேர்முக தேர்விற்கு வருமாறு துறை சார்பில் கடந்த 12-ம் தேதி ஊட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவகத்தில் இருந்து அழைப்பாணை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 



அதில், நேற்று (16-ம் தேதி) காலை 10.30 மணிக்கு ஊட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் நேர்முக தேர்விற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்திற்கு கடந்த 14-ம் தேதி வந்தடைந்துள்ளது. வித்யா வசிக்கும் சாந்தி நகர் விலாசம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்திற்கு நேர்பின்புறம் மிக அருகிலேயே உள்ளது. இருப்பினும், கடிதம் 14-ம் தேதியோ அல்லது 15-ம் தேதியோ கூட வழங்கப்படாமல், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 16-ம் தேதி (நேற்று) மதியம் 1.40 மணிக்கு வித்யாவிடம் வழங்கப்பட்டுள்ளது. 

காலை 10.30 மணிக்கு பங்கேற்க வேண்டிய நேர்முக தேர்வுக்கான கடிதம் மதியம் இரண்டு மணியளிவில் கிடைத்ததால் அதிர்ச்சியடைந்த வித்யா, கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்ற தனது அரசுப்பணி கனவு ஒரு சிலரின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டு விட்டதாகக் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார். தாமதம் பற்றி புகார் தெரிவிக்க தலைமை தபால் அலுவலகம் சென்ற வித்யாவிடம் இது குறித்து புகார் கடிதம் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அங்குள்ள அதிகாரிகள் அலட்சியத்துடன் பதில் அளித்ததாக வித்யா குற்றம்சாட்டினார். மேலும், இனி யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்றார் அவர். இது குறித்து மேட்டுப்பாளையம் தலைமை தபால்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது வித்யாவிடம் அளித்த அதே பதிலை நம்மிடமும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...