"கெப்பாசிட்டிஸ் திட்டத்தால் பருவநிலைக்கேற்றவாறு காற்றின் மாசுபாட்டைக் குறைக்க முடியும்"

கெப்பாசிட்டிஸ் திட்டத்தின் மூலமாக பருவநிலை மாறுவதற்கேற்ப காற்றின் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என இந்தியா மற்றும் பூடான் நாடுகளின் தூதர் ஆண்ட்ரியாஸ்பாம் தெரிவித்துள்ளார்.

கோவை : கெப்பாசிட்டிஸ் திட்டத்தின் மூலமாக பருவநிலை மாறுவதற்கேற்ப காற்றின் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என இந்தியா மற்றும் பூடான் நாடுகளின் தூதர் ஆண்ட்ரியாஸ்பாம் தெரிவித்துள்ளார். 



கோவை மாநகராட்சியில் ஸ்விஸ் தூதரகம் சார்பில் கெப்பாசிட்டிஸ் திட்டத்தின் மூலம் பணிகள் குறித்து தனியார் ஹோட்டலில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட ஸ்விட்சர்லாந்து நாட்டின் இந்தியா மற்றும் பூடான் தூதர் ஆண்ட்ரியாஸ்பாம் பேசியதாவது :-  இந்தியாவில் நகரமயமாதல் அதிகமாகி வருவதற்கு ஏற்ப எரிசக்தி நுகர்வும் அதிகமாகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசினை தவிர்க்க ஸ்மார்ட் சிட்டி, தூய்மை பாரத இயக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவது போல் கெப்பாசிட்டிஸ் திட்டத்தின் மூலமும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் முதற்கட்டமாக இத்திட்டப்பணிகளை செயல்படுத்த கோவை, உதய்பூர், ராஜ்கோட், சிலிகுரி ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளன. கோவை முக்கிய நகரமாகும். பஞ்சாலைகள், மோட்டார் தொழிற்சாலைகள் நிரம்பவுள்ளன. கெப்பாசிட்டிஸ் திட்டப்பணிகள் மட்டுமல்லாது பல நிறுவனங்கள் இங்கு உள்ளன. கோவை மாநகராட்சியில் இத்திட்டப்பணிகளால் பருவநிலை மாறுவதற்கேற்ப காற்றின் மாசு அளவை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். 

இன்று இக்கருத்தரங்கில் குடிநீர், கழிவுநீர், குப்பை மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, நகர திட்டம் மற்றும் பசுமைப் பகுதி போன்ற வளர்ச்சிப் பணிகளுக்காக 4 குழுக்களாக கலந்துரையாடி அறிக்கை அளிப்பார்கள். அதனடிப்படையில் ஸ்விஸ் தூதரகம் கெப்பாசிட்டிஸ் திட்டம் வாயிலாக கோவை மாநகராட்சியில் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க.விஜயகார்த்திகேயன் பேசுகையில், "காற்று மாசு அளவிடும் கருவிகள் மற்றும் 1 டன் குப்பையிலிருந்து மீத்தேன் வாயு மூலம் உழவர் சந்தை விளக்குகளுக்கான மின் உற்பத்தி செய்யும் பணிகளையும் மற்றும் 22, 24 வார்டுகளுக்கு தூய்மை பணிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் பணிகளையும், கெப்பாசிட்டிஸ் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி, தூய்மை பாரதம், அம்ருத் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் மாநகராட்சி திட்டப்பணிகளுடன் கெப்பாசிட்டிஸ் திட்டத்தின் பணிகளும் கோவை மாநகராட்சியின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தப்படும்," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...