கூட்டணி முறிவு : பா.ஜ.க.வுக்கு டாட்டா காட்டிய ஆந்திரா

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.

ஆந்திரா, தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 

ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி முறையாக பதில் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறப்பு நிதி வழங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ஆந்திரா முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பின்னர் பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகுவதாக அதிரடியாக தெரிவித்தார். மேலும், பிரதமா் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...