காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சையளிக்க முயன்ற வனத்துறையினர்

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் கடுமையாக போராடினர்.

கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் கடுமையாக போராடினர். 



மாங்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் காட்டு யானைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், வலி தாங்க முடியாமல், வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்த யானை, குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் சுற்றித் திரிந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட வன அதிகாரி என். சதீஷ் தலைமையிலான குழுவினர், யானையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 



மேலும், வன கால்நடை மருத்துவர் என்.எஸ். மனோகரின் உதவியுடன் மருந்து பொருட்கள் கலந்த உணவுகளை யானைக்கு கொடுக்க முயன்றனர். அருகில் இருந்த தண்ணீர் தொட்டியிலும் மருந்து கலக்கப்பட்டது. படுகாயத்துடன் பிளிறியபடி இருந்த யானையால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் சற்று பீதியடைந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...