17 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு : வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வெள்ளலூர் - இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் ஜெகநாதன் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதில், குற்றவாளி ஜெகநாதனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அபராதமும், இழப்பீடும் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...