எடை குறைத்து வழங்கப்படும் ரேஷன் பொருட்கள்: முறையிடாத மலைவாழ் மக்கள்

கோவை மாவட்டம் ஆனைகட்டியில் நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்து வரும் நிலையில், அதனை எதிர்த்து கேட்க முடியாத சூழலுக்கு மலைவாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டியில் நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்து வரும் நிலையில், அதனை எதிர்த்து கேட்க முடியாத சூழலுக்கு மலைவாழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனைகட்டி பகுதியில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராம மக்களுக்கு நடமாடும் நியாய விலைக்கடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும், அது செயல்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தூமனூர், சேம்புக்கரை, ஆரநாட்டுக்காடு, தூவைப்பதி, கொண்டனூர் புதூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள், அரசு கொடுக்கும் இலவச அரிசியை பணம் கொடுத்து வீட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர். சேம்புக்கரைக்கு ஒரு கிலோ அரிசிக்கு இரண்டு ரூபாய் வாகன செலவிற்கு கொடுக்க வேண்டியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 



ஆலமரமேடு பகுதியிலுள்ள நியாய விலைக்கடை வாரத்திற்கு இருநாட்கள் செயல்பட வேண்டும். ஆனால், பொருட்கள் இல்லாமல் மூடியே கிடப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், இங்குள்ள நியாய விலைக்கடையில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஆலமரமேடு மற்றும் ஆனைகட்டி பொதுவிநியோகக் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியை வேறொரு எடைபோடும் இயந்திரத்தில் எடை போட்டால் ஒருகிலோ முதல் இரண்டு கிலோ வரை குறைவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரம் எங்களுக்கு தெரிந்தும், நாங்கள் எப்படி கேட்க முடியும் என அப்பாவிகளாக நம்மிடமே கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், சர்க்கரைக்கு ஒரு கிலோவிற்கு 100 கிராம் வரை குறைத்து வழங்கப்படுகிறது. அரசு கொடுக்கக்கூடிய இலவச அரிசியைக் கூட அளவை குறைத்து கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. டன் கணக்கான ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அரசு வட்டாட்சியர் தலைமையில் பறக்கும்படை அமைத்தால் மட்டும் போதாது என்றும், கண்காணிப்பு கேமராக்கள் ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் பொருத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பொதுமக்கள் வாங்காத பொருட்களை வாங்கியதாக நியாய விலைக்கடையில் பணிபுரிபவர்கள் பதிவு செய்வதால், தொலைபேசிகளில் வரும் குறுந்தகவல்கள் குறித்து நிறையப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இத்தனை முறைகேடுகளையும் தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...