ராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்: மத்திய அரசு

ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தின் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் இருந்து இலங்கையின் மன்னார் வளைகுடா வரையில் சுண்ணாம்புக் கற்களாலான மேடான பகுதி செல்கிறது. இது இயற்கையாக உருவானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், புராணத்தின்படி சீதையை மீட்க ராமர் மற்றும் வானரங்களால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் நம்புகின்றனர். ‘ஐஸ் ஏஜ்’ காலத்தில் இந்தப் பாலம் இயற்கையாக உருவானது என்று புவியியல் ஆதாரங்கள் கூறுவதாக என்சைக்கிளோபீடியா பிரிட்டானிகா கூறி உள்ளது. இதனிடையே, இவ்வழியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்ட மத்திய அரசின் சேது சமுத்திர திட்டம் பெரும் விவாதப்பொருளாகியது.

தென் தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம், சேது சமுத்திர திட்டம். இந்தத் திட்டம் நிறைவேறினால், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறையும். பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். இலங்கையை சுற்ற வேண்டியதும் இல்லை. இந்தத் திட்டம் மத்தியில் அமைந்திருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாவது ஆட்சி காலத்தில், 2005-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. ஆனால், இந்த திட்டப்பணிகளால் ராமேசுவரத்துக்கும், மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் பாதிக்கப்படும் என கருத்து எழுந்தது. சேது சமுத்திர திட்டத்திற்கு ராமர் பாலத்தை அகற்றக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். 

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் ‘சேது சமுத்திர திட்டம் ராமர் சேது பாலத்துக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மாற்றுவழியில் நிறைவேற்றப்படும்’ என தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றும்போது, ராமர் சேது பாலத்தை இடிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என பா.ஜ.க. அரசு கூறியிருந்தது.

இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான பதில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் ராமர் பாலத்தை அகற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...