தொடங்கியது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது


கோவை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. 

ஏப்ரல் 20-ம் தேதிவரை நடைபெறும் இந்த தேர்வினை தமிழகத்தில் மட்டும் சுமார் 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், 36 ஆயிரத்து 649 பேர் தனித் தேர்வர்கள். இதற்காக, 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களிலும் 6 ஆயிரத்து 900 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 305 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்து 820 மாணவர்கள், 8 ஆயிரத்து 694 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 514 பேர் எழுதுகின்றனர். புதுச்சேரியில் 38 மையங்கள், காரைக்காலில் 13 மையங்கள் என மொத்தம் 52 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. மேலும், தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களைக் கண்காணிக்க புதுச்சேரியில் 5 பறக்கும் படைகளும், காரைக்காலில் 2 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மைய அறை கண்காணிப்பாளர்களாக மட்டும் 991 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...