காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தமிழக அரசின் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது முதலமைச்சர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான சட்டப்போராட்டத்தை நடத்தியுள்ளது. கடந்த காலங்களை போலவே, மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை. காவிரி விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு கோரி மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் தந்தவர் ஜெயலலிதா. என்றார். 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக எடுத்த நடவடிக்கைகளைப் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பட்டியலிட்டார். மேலும், சென்னை வந்த பிரதமரிடம், அனைத்துக் கட்சி தீர்மானத்தை விளக்கி கோரிக்கை வைத்தோம் என கூறினார்.

காவிரி விவகாரத்தில் தி.மு.க., செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து, தீர்மானத்தை நிறைவேற்றி தருமாறு அனைத்து கட்சி உறுப்பினர்களிடமும் சபாநாயகர் வேண்டுகோள் வைத்தார். 

பின்னர், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :- ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டிருக்கும் நேரமல்ல இது. விவசாயிகள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்துக்கு தி.மு.க., முழு ஆதரவு உண்டு. காவிரி விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது என தி.மு.க. எண்ணுகிறது. அனைத்து கட்சி தலைவர்களை பிரதமர் சந்திக்காதது ஜனநாயகத்தின் நெருக்கடியான தருணமாகும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் கடத்தாமல் அமைக்க வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு தமிழக மக்களின் கோபத்திற்கு உள்ளாகும். 

தமிழகத்திற்கு முழுமையான நீரை கர்நாடக எந்த ஆண்டும் வழங்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்திற்காக அனைத்து தி.மு.க எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யத் தயார். காவிரி விவகாரம் டெல்டா விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் பிரச்சனையாக உள்ளது. எனக் கூறினார். 

பின்னர், முதலமைச்சர் தாக்கல் செய்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தீர்மானம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...