சுற்றுலா பயணிகளை கவரும் மலை ரயில் மாதிரியான பொருட்கள்

பாரம்பரிய நீலகிரி மலை ரயிலைப் பாதுகாக்கும் வகையில் ரயில்வேத்துறை சார்பில் மலை ரயில் மாதிரியான பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

நீலகிரி: பாரம்பரிய நீலகிரி மலை ரயிலைப் பாதுகாக்கும் வகையில் ரயில்வேத்துறை சார்பில் மலை ரயில் மாதிரியான பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஹோம்மேடு சாக்லெட், தேயிலை தூள் போன்றவை இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இன்னொரு சிறப்பு அம்சமான பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் அழகிய மலைகள், இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சி போன்றவை கண்டு ரசித்தப்படியே பயணம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இந்நிலையில், இந்தப் பாரம்பரிய மலை ரயிலைப் பாதுகாக்கும் வகையில், இந்திய ரயில்வேத்துறை சார்பில் உதகை, குன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் மலை ரயிலின் மாதிரிகளைக் காட்சிப்படுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி மக், கீ செயின், டை, பேனா ஸ்டேண்டுகள், குழந்தைகள் விளையாடும் ரயில் சார்ந்த பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்து வருகின்றனர். இந்தப் பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய ரயில்வே அருங்காட்சியகத்தில் இருந்து வரவழைக்கப்படு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 ரூபாய் முதல் ரூ. 2,500 வரை இந்தப் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...