வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை கொள்ளை

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 

இடுவம்பாளையம் பகுதியில் உள்ள காமாட்சி நகர் பகுதியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த பூபாலன் மற்றும் நதியா தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். பூபாலன் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல நேற்று பனியன் நிறுவனத்திற்கு சென்றுவிட்ட நிலையில், நதியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், பூபாலனின் சகோதரர் ஜீவா நேற்றிரவு வீட்டிற்கு வந்து பார்த்த, நதியா கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, திருப்பூர் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜ் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் நேற்று மாலை 6 மணி வரை அக்கம்பக்கத்தினரோடு நதியா பேசிக் கொண்டிருந்ததாகவும், அதற்குப் பின்னரே அவர் வீட்டிற்குள் சென்றதாகவும் அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், கொலை செய்த மர்ம நபர்கள், சடலமாக கிடந்த நதியாவின் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்துள்ளது. எனவே, இந்தக் கொலை நகைக்காக செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...