மஞ்சூர் பகுதியில் அரசு மதுபான கடை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி அப்பகுதி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி அப்பகுதி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இது தொடர்பாக அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

குந்தா தாலூக்காவின் மிக முக்கிய வியாபார ஸ்தலமாக இருப்பது மஞ்சூர். இப்பகுதியைச் சுற்றி 30,000 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்ற தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள மதுபான கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்டத்தின் பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபான கடைகள் அகற்றப்பட்டன. 

குறிப்பாக மஞ்சூர் பகுதியில் இருந்த இரண்டு மதுபான கடைகளும் அகற்றப்பட்டன. இதனால், இப்பகுதியில் இருப்பவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று மது பானங்களை வாங்கி வரும் நிலை ஏற்பட்டது. மேலும், இப்பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.



நீலகிரிக்கு, அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு மது பானங்கள் கிடைக்காததால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா விடுதிகள் நடத்தி வருபவர்கள் மற்றும் உணவு விடுதி நடத்தி வருபவர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...