உயிரை பணயம் வைத்து பணிபுரியும் எங்களுக்கு போதிய அங்கீகாரம் இல்லை - தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோவை மண்டல அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோவை மண்டல அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிய ஒப்புதல் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.380 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை பவர் ஹவுஸ் அருகே தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோவை மண்டல அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து ஒப்பந்த பணியாளர் எஸ். ஆறுமுகம் கூறுகையில், "1998-ம் ஆண்டு முதல் இன்று வரை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரியப் பிரிவு அலுவலகங்களிலும் சுமார் 2 ஆயிரம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக மின் பணிகளை செய்து வருகிறோம். ஆனால் 2008-ம் ஆண்டு முதல் எந்த ஒரு பணியும் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு செய்வதில்லை என அரசுக்கு தகவல் அனுப்புகிறது." என்றார். 

"புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 12 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் மின் கம்பங்களை சீர் செய்வது என அனைத்து மின் பணிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால், எங்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய எந்த அதிகாரியும் முன்வருவது இல்லை." என்றார் மற்றொரு பணியாளர் ஆர். சம்பத்குமார்.

போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நாகராஜ் கூறுகையில், "உயிரைப் பணயம் வைத்து வேலை பார்க்கும் எங்களில் பலர் சில சமயங்களில் பணியின் போது ஏற்படும் விபத்தால் உயிர் கூட இழந்துள்ளார்கள். இவ்வாறு வேலை பார்க்கும் எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை" என்றார்.



இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கலந்துகொண்டனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...