அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்: புதிய அமைப்பைத் தொடங்கினார் டி.டி.வி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பை எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தொடங்கியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பை எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தொடங்கியுள்ளார்.

மதுரை மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள திடலில் டி.டி.வி. தினகரன் நடத்தும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்ட திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரது முழு உருவ பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. 



அந்த திடலுக்கு காலை 10 மணி அளவில் டி.டி.வி.தினகரன் கார் மூலம் விழா மேடைக்கு வந்தார். அவருக்கு தொண்டர்கள் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

வரவேற்புக்குப் பின்னர் மேடைக்கு வந்த டி.டி.வி.தினகரன் புதிய அமைப்பின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். தனது அமைப்புக்கு ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். 

தொடர்ந்து, கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்திய அவர், மேடை முன்பு அமைக்கப் பட்டு இருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...