சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி த.பெ.தி.க., வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம்

வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வர்ணாசாரத்தையும், சாதி வேறுபாட்டையும் பள்ளி மாணவர்கள் மனதில் புகுத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கு.ராமகிருட்டிணன் கலந்து கொண்டார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தொடர்ந்து சாதி, மத வேறுபாடுகளையும் விஷ கருத்துகளையும் மாணவர்களிடையே விதைக்கின்ற பாடத்திட்டங்களையும், கேள்விகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி தாளில் வர்ணாசரமத்தில் இழிவான சாதி, பிராமணர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள் என வினா எழுப்பப்பட்டு இதில் இழிவானவர்கள் யார் என கேட்கப்பட்டிருப்பது ஜாதி வேறுபாட்டை குழந்தைகளின் மனதில் புகுத்தும் விதமாக கேட்கப்பட்டு இருப்பது மாணவர் பருவத்திலேயே ஜாதிய வன்கொடுமையைத் தூண்டும் விதமாக அமைத்திட வழிவகுத்துவிடும். 

கடந்த காலங்களிலும் இதுபோன்று இழிவாக எழுதியுள்ளது. அதனை எதிர்த்து அந்த சமூகத்தினர் போராடி வருகின்றனர். அம்பேத்கரை நேரு சாட்டையால் அடிப்பது போல சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒரு படத்தை வெளியிட்டு அதறக்கான காரணத்தையும் விளக்கி உள்ளனர். அதில், அம்பேத்கர் எழுதிய சட்டம் தவறாக இருப்பதாகவும், அதற்காக நேரு சவுக்கால் அடிப்பது போல படத்தை வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது. இவை அனைத்தும் தலைவர்களையும், சமூகத்தையும் இழிவுப்படுத்தி நாட்டை கூறுபோட மத்தியில் ஆளும் பா.ஜ.க. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வர்ணாசரம திட்ட கொள்கைகளை புகுத்தும் இந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற விஷ கருத்துகள் பரப்புகின்ற பள்ளிகளை மூட வேண்டும். புதிதாக தமிழகத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...