கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த 'நோ டம்பிங்' என்ற அமைப்பிற்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோவை : கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கிய கோவையைச் சேர்ந்த 'நோ டம்பிங்' என்ற அமைப்பிற்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு 'நோ டம்பிங்' என்ற சமூக சேவைக்கான அமைப்பை கோவையைச் சேர்ந்த பிரசாந்த், சரண்ராஜ் மற்றும் சுரேஷ் பண்டாரி ஆகியோர் உருவாக்கினர். இவர்கள், இந்த அமைப்பின் மூலம் கோவை மாநகராட்சிக்கு கழிவு மேலாண்மையின் மூலம் உதவி வருகின்றனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து நகரை தூய்மைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறந்து விளங்கிய 'நோ டம்பிங்' அமைப்பிற்கு பிரதமர் விருது வழங்கப்பட்டது.
'நோ டம்பிங்' அமைப்பின் மூலம் தற்போது கோவையில் நாள்தோறும் 43 குடியிருப்பு நலச் சங்கங்கள், 4,200-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விமானநிலையம் போன்ற இடங்களில் இருந்து 5 டன்னிற்கும் மேலான குப்பைகள் பிரித்தெடுக்கப்படுகிறது.