பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகிய துறைகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 473 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டது.
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகிய துறைகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 473 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டது.

முன்னதாக, 16 பேருக்கு இந்த பணி நியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதமுள்ள வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.