உரிய அனுமதி பெற்றே பிறகே டிரெக்கிங் சென்றோம் : சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம்

வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்றுதான் மலையேற்றம் சென்றதாக சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம் அளித்துள்ளது.

வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்றுதான் மலையேற்றம் சென்றதாக சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம் அளித்துள்ளது. 

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த காட்டுத் தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்கப் போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, உரிய அனுமதியின்றி டிரெக்கிங் சென்றதாக புகார் எழுந்தது. இந்த தீ விபத்து ஏற்பட்டதும், டிரெக்கிங் குழுவை ஒருங்கிணைத்த நிறுவன உரிமையாளர் பீட்டர் தலைமறைவானார். குரங்கணி தீ விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. 

இந்த நிலையில், சென்னை டிரெக்கிங் கிளப் தரப்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. டிரெக்கிங் கிளப் நிறுவன முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ”குரங்கணி வனப்பகுதிக்குள் சென்ற போது அங்குக் காட்டுத்தீக்கான அறிகுறி எதுவும் இல்லை. வனத்துறைக்கு கட்டணம் செலுத்தி அனுமதிச்சீட்டு பெற்றுதான் குரங்கணி வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றோம். வழிகாட்டிகள் அருண், விபின் ஆகியோர் டிரெக்கிங்கில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள்.

குரங்கணி மலை அடிவாரத்தில், பருவகால சாகுபடிக்காக புற்களை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். குரங்கணி முதல் கொழுக்கு மலை வரை மலையேற்றம் செல்வது வழக்கமானது. போடி பள்ளத்தாக்கில் வழக்கத்தை விடக் காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவெனப் பரவியது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...