கோடை சுற்றுலா : உதகை தாவரவியல் பூங்காவின் சிறப்புகள்

கோடைக்காலம் தொடங்கி விட்டது. ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள் 'ஜில்' என்று இருக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி ஊட்டிக்கு புறப்பட்டு விடுவார்கள்.

நீலகிரி: கோடைக்காலம் தொடங்கி விட்டது. ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள் 'ஜில்' என்று இருக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி ஊட்டிக்கு புறப்பட்டு விடுவார்கள். 



சரி..! அப்படி, ஊட்டியில் செல்பவர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லலாம். அந்த பகுதியின் சிறப்புகள் என்ன? என்பதை விளக்குகிறது இந்த வாராந்திர கட்டுரை.

 

உதகை தாவரவியல் பூங்கா

உதகை அரசு தாவரவியல் பூங்கா நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இந்த பூங்கா கடந்த 1897-ம் ஆண்டு மார்குயுஸ் டிவ்டேல் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. 22 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த தாவரங்கள் உள்ளன. 150-க்கும் மேற்பட்ட வகைகளில் வெளி நாட்டு மரங்களும், அலங்கார செடிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கண்களைக் கவரும் வகையில் பச்சை பசேல் என்ற புல்வெளி உள்ளது. 



இந்த புல்வெளியின் ஓரத்தில் பல ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. இது மட்டுமின்றி கல்லாகி போன மரம், இத்தாலியன் பூங்கா, புல்வெளி, குளங்கள், இந்திய வரைபடம், கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், விதை கூடம் மற்றும் விற்பனை நிலையமும் உள்ளது.சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்லாமல், தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த பூங்கா பயனுள்ள இடமாக திகழ்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது வாரத்தில் மூன்று நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. 



அதன்படி, இந்த ஆண்டும் வரும் மே மாதம் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. பூங்காவிற்குள் செல்ல கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15, புகைப் பட கருவி (ஸ்டில் கேமிரா) பயன்பாட்டிற்கு ரூ.50, ஒளிபடகருவி (வீடியோ கேமிரா) ரூ.100 என்று வசூலிக்கப்படுகிறது.

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கோடை சீசனின் போது அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக அரசு தாவரவியல் பூங்கா மற்றும் அனைத்து சுற்றுலா தலங்களை இணைக்கும் சுற்று பேருந்துகளும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...