உதகையில் தொடங்கியது சீசன் : அதிகரிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா அனைவரையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக, இயற்கை சூழ்ந்த இடமாகவும், அரிய வகை மரங்கள் மற்றும் பல்வேறு வண்ண மலர்கள் என இங்கு வரும் சுற்றுலா பயணிகளை இப்பூங்கா கவர்ந்துள்ளது.

மேலும், தாவரவியல் பயிலும் மாணவர்கள் இங்குள்ள தாவரங்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதனால், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2016 முதல் 2017-ம் ஆண்டு வரை 8,983 பேர் வருகை புரிந்துள்ளனர். இந்தாண்டு 2017-2018ஆம் ஆண்டில் நேற்று வரை 10,413 பேர் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்து பூங்கா நுழைவு வாயில் பகுதியில் வருகை பதிவேடு மூலம் அவர்கள் பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என பூங்கா ஊழியர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...