விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பட்டு வளர்ச்சித்துறை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறையின் சார்பாக பட்டு விவசாயிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறையின் சார்பாக பட்டு விவசாயிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாநில திட்டத்தின் கீழ் 2017 - 2018-ம் ஆண்டுக்கான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் பட்டு வளர்க்கும் 7 விவசாயிகளுக்கு மானியமாக ரூ.4,83,875 காசோலையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். 

மேலும், பட்டு வளர்ப்பு தொழிலில் பிற்பட்டடுத்தப்பட்ட பிரிவின் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.52,500 மதிப்பிலான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது, குன்னூர் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் டி.பாலசுப்ரமணியன், தொழில்நுட்ப உதவியாளர் ரவிசங்கர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...