குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரி மனு

நீலகிரியில் புதியதாக அமைக்கப்பட்ட கிணறு மற்றும் குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரியில்  புதியதாக அமைக்கப்பட்ட கிணறு மற்றும் குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்  கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



உதகையை அடுத்த கெந்தளா கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஏற்ப்பட்ட குடிநீர் பிரச்சனை  காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கிணறு, குடிநீர் தேக்கத் தொட்டி, பம்பு அறை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. 

பணிகள் நிறைவடைந்து ஓராண்டு காலமாகியும் குடிநீர் விநியோகம் இதுவரை செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை அதிகரட்டி பேரூராட்சியில் மனு அளித்தும், பணி முடிந்ததற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனக்  கூறி பேரூராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, உடனடியாக இது தொடர்பாக  உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகம் செய்ய ஆணையை பிறப்பிக்குமாறு கூறி இன்று அக்கிராம மக்கள் 100-க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...