அனுமதி பெறாமல் சென்றதால் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது: தேனி தீ விபத்து தொடர்பாக முதலமைச்சர் கருத்து

அனுமதி பெறாமல் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றதால் தன் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று முதல் அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அனுமதி பெறாமல் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றதால் தன் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று முதல் அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் அமைச்சர் பழனிச்சாமி கூறியதாவது:- 

குரங்கணி காட்டுத் தீக்கான காரணம் பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி பெற்று செல்ல வேண்டும். வரும் காலத்தில் அனுமதி பெறாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெறாமல் மலையேற்ற பயிற்சிக்கு சென்றதால் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோடைக்காலத்தில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளதால், மலையேற அனுமதிப்பதில்லை. அரசின் அனுமதி பெற்றுச் சென்றால் தான் பாதுகாப்பு அளிக்க வசதி செய்யப்படும். காட்டுத்தீயில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற மாலையில் மதுரை செல்கிறேன். காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை, தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி மலையேறும் பயிற்சிக்கு சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...