தேனி தீ விபத்து: அரசியல் கட்சியினர் இரங்கல்

தேனி மாவட்டம் குரங்கனியில் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் செய்த முப்பதுக்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் 9 பேர் பலியாகினர். தற்போது மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் மற்றும் தீக்காயமடைந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தேனி: தேனி மாவட்டம் குரங்கனியில் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் செய்த முப்பதுக்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் 9 பேர் பலியாகினர். தற்போது மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் மற்றும் தீக்காயமடைந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:- 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு: குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கவிஞர் வைரமுத்து: உயிர் வலிக்கிறது; ஊரே அழுகிறது. காட்டுத்தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டுமே என்று பேராசை கொள்கிறேன். பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன்.

“சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ; தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ” என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன் வாங்கிக் கலங்குகிறேன். இந்த விபத்தில் இயற்கையின் பங்கு எவ்வளவு, மனிதப் பங்கு எவ்வளவு என்பது ஆய்வுக்குரியது. மரணத்திலிருந்து பாடம் படிப்போம்; புதிய இழப்புகள் நேராமல் காப்போம்.



கமலஹாசன்: குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள்.



மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: காட்டுத்தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்திட எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். 



விஜயகாந்த்: போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்டபோது 40-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் தீயில் சிக்கி விபத்து ஏற்பட்ட செய்தி கேட்டு மிகவும் மன வேதனையடைந்தேன். மத்திய,மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மாணவிகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...