கோவையில் அனைத்துக் கட்சியினர் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை: கோவையில் அனைத்துக் கட்சியினர் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியார் சிலை விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு நேற்று அனைத்துக் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, பொதுமக்களைத் திரட்டி 'பெரியாரைக் காப்போம், அவரது கொள்கையை காப்போம்' என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அம்பேத்கர், லெனின் சிலைகளை மீண்டும் அமைக்க ஒன்றிணைய வேண்டும் என்று இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சியினர் தெரிவித்தனர். இதில், தி.க., தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ.,விடுதலை சிறுத்தைகள் மற்றும் அனைத்து கிறிஸ்துவ மக்கள் ஒருங்கிணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.