தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் கட்டுபாட்டை இழந்து மோதியது

தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் கட்டுபாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல அலட்சிம் மற்றும் காலதாமத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனையிலேயே துடிதுடித்து மேலும் ஒருவர் பலி காரில் வந்த இருவர் காயம்


தாராபுரம் அருகே இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் கட்டுபாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்ல அலட்சிம் மற்றும் காலதாமத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனையிலேயே துடிதுடித்து மேலும் ஒருவர் பலி காரில் வந்த இருவர் காயம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோவை சாலையில் உள்ளது ருத்ராவதி கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் கொத்தயம் நோக்கி காரில் செந்தில்குமார் மற்றும் பால்ராஜ் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர் ருத்ராவதி அருகே கார் கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களின் மீது படு வேகமாக மோதியது இதில் இரு சக்கர வாகணத்தில்  தேனியை நோக்கி சென்று கொண்டிருந்த சுதாகர் மற்றும் முத்து என்ற தங்கபாண்டி மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அடையாளம் தெரியாத கணவன் மனைவி மற்றும் சுதாகர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த முத்து என்ற தங்கபாண்டி மற்றும் காரில் வந்த செந்தில்குமார் பால்ராஜ் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கபட்டு பின்னர் மேல்சிகிச்சைகாக பால்ராஜ் மற்றும் செந்தில்குமார் கோவை கொண்டு செல்லபட்டனர்.  படுகாயமடைந்த முத்து என்ற தங்கபாண்டிமேல்சிகிச்சைக்கு கொன்டு செல்ல அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கு மற்றும் காலதாமத்தால் துடிதடித்து இறந்தார். இதில் சுதாகர் காவல்துறை தேர்வு எழுதிவிட்டு கோவையில் இருந்து தேனி திரும்புகையில் விபத்து நடைபெற்றுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேலுமணி இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விபத்துகான காரணம் குறித்து ஆய்வுசெய்து வருகின்றனர் இறந்து போன கணவன் மனைவி யார் என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...