கோவையில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழா : பார்த்து ரசித்த பொதுமக்கள்

கோவையில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


கோவை : கோவையில் நடைபெற்ற ஒயிலாட்ட அரங்கேற்ற விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.



சங்கமம் ஒயிலாட்ட குழு கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினரின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா கணியூரை அடுத்த கொள்ளுபாளையம் மணியகாரர் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது. 

இவ்விழாவை காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தொடங்கி வைத்தார். 



தொடர்ந்து அவர் மக்களிடம் பேசுகையில், "மறந்து போன கலையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடும் கலை குழுவினருக்கு வாழ்த்துக்கள். மூன்று தலைமுறையினர் பங்கேற்கும் இவ்விழா சிறப்பாக நடைபெற வேண்டும்." என்றார்.

குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பல்வேறு வயதுடையோர் மேள இசைக்கு ஏற்றபடி ஆடிய ஒயிலாட்ட நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.



இது குறித்து சுசித்தரா என்ற மாணவி கூறுகையில், " முதலில் இந்த ஒயிலாட்ட நிகழ்ச்சியைக் காண சென்றேன். அதன்பிறகு இந்த கலையால் ஈர்க்கப்பட்டு குழுவில் இணைந்து கடந்த 8 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தேன். தற்போது ஒயிலாட்டத்தை முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்துள்ளேன்." என்றார்.

இந்த ஒயிலாட்ட நிகழ்ச்சியில் 50 பேரின் அரங்கேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...