பீளமேடு அரசு மருத்துவ கல்லூரி அருகே தீ விபத்து: பொதுமக்கள் அவதி

கோவை பீளமேடு அரசு மருத்துவ கல்லூரி எதிரே காலியாக இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதில் பொதுமக்கள் அவதி.


கோவை: கோவை பீளமேடு அரசு மருத்துவ கல்லூரி எதிரே காலியாக இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியதில் பொதுமக்கள் அவதி.

பீளமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி எதிரே உள்ள காலியான இடத்தில் காய்ந்த செடிகள் மற்றும் சிறிய மரங்கள் இருந்த இடத்தில் இன்று மதியம் 12 மணியளவில் தீ பிடித்தது. தீ மளமளவென பரவியதால் புகை மூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் வணிக அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்கடங்காமல் பரவியதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் அப்பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். 

மேலும், தீ ஏற்பட்ட இடத்தின் பின்புறம் வீடுகளும், மாணவர்கள் தங்கி பயிலும் அறைகள் ஏராளமாக உள்ளன. விரைவாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...