காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம்: எஸ்.பி.வேலுமணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாடு கைத்தறி ஜவுளித்துறை மற்றும் கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மேலாண்மை கல்லூரி சார்பில் தொழில்நுட்ப ஜவுளி மைய துவக்க விழா அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது:- இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஜவுளித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

தொழில்நுட்ப ஜவுளி புத்தாக்க முயற்சியை துவங்கி உள்ளதன் மூலம் 13 வகையான புதிய உற்பத்திகளை ஜவுளி துறையில் துவங்க உள்ளது. இது தொழில் புரட்சியை ஏற்படுத்தும். குக்கர் சின்னம் டிடிவி தினகரனுக்கு ஒதுக்கியது நீதிமன்ற உத்தரவு என்பதால் கருத்து கூற கூடாது. காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளித்து உள்ளது. சில குறைபாடுகள் இருந்தாலும் விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் 

அமைக்க வேண்டும் என்பது தான் தங்களது கருத்து. விரைவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து தங்களது எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்தின் உரிமையை மீட்டு எடுக்க தொடர்ந்து அ.தி.மு.க. பாடுபட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விட மாட்டோம்,” என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...