வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

கோவை இருகூர் பகுதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவை: கோவை இருகூர் பகுதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

இருகூரில் உள்ள பழனிமலை தேவர் வீதியில் வசித்து வருபவர் தனபாலின் மகன் தியாகராஜன் (29). இவர் கடந்த 8ம் தேதி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், இன்று காலை இருகூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர் கதவு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது 3 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், தகவலறிந்து வந்த போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவையில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் மற்றும் சங்கிலி பறிப்பு குற்றங்கள் நடைபெறுவதால் கோவை மாநகரில் போலீசார் வாகன தணிக்கை மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...