திபெத்தியர்களின் 59ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு உதகையில் திபெத்தியர்களின் பேரணி

நீலகிரி மாவட்டம் உதகையில் திபெத்தியர்களின் 59ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு பேரணி நடத்தப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் திபெத்தியர்களின் 59ம் ஆண்டு எழுச்சி நாளை முன்னிட்டு பேரணி நடத்தப்பட்டது.



திபெத்தியர்களின் கலாச்சாரம், மதம் மற்றும் தேசத்தினை காப்பாற்ற 1959ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி ஏற்பட்ட எழுச்சியினை முறியடிக்க சீனாவின் அரசு 1.2 மில்லியன் மக்களை படுகொலை செய்தது. 



அன்றிலிருந்து உலகெங்கிலும் உள்ள திபெத்தியர்கள் மார்ச் 10ம் நாளினை திபெத்தியர்கள் எழுச்சி நாளாக நினைவுப்படுத்தி வருகின்றனர். திபெத்தில் இருக்கும் சீன ஆட்சியை எதிர்த்து 2008, 2009ல் ஏற்பட்ட திபெத் எழுச்சியில் 100க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் நம்பிக்கை இழந்து தாங்களாகவே உயிர் தியாகம் செய்தனர். இந்நிலையில் திபெத்தியர்களின் எழுச்சி நாளின் 59வது ஆண்டு நினைவு நாள் இன்று உதகையில் உள்ள திபெத்தியர்கள் அனுசரித்தனர். அதன் ஒரு பகுதியாக உதகை ஏடிசி பேருந்து நிலையம் முதல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...