முதுமலையில் வறட்சியின் கோர தாண்டவத்திற்கு ஆண் யானை பலி

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வறட்சியின் காரணமாக 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் வறட்சியின் காரணமாக 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. 

முதுமலை புலிகள் காப்பகத்தில் பசுமை குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியின் உள்பகுதியில் ஓம் பெட்டா, கேம் அட் ஆகிய இடங்களில் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் இருப்பினும், ஒரு சில குளங்கள் நீரின்றி வற்றி போயுள்ளன. வனத்துறையினர் விலங்குகளின் தேவைக்காக தினம்தோறும் இந்தக் குளங்களில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், கார்குடி சரகத்துக்கு உட்பட்ட நெல்லிக்கரை பகுதியில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. புலிகள் காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாச ஆர். ரெட்டி, சரகர் ராஜேந்திரன், கால்நடை மருத்துவர் பிரபு ஆகியோர் அங்கு சென்று யானையை ஆய்வு செய்தனர். வனத்துறையினர், பிரேத பரிசோதனை செய்து தந்தங்களை நீக்கிய பின் யானையின் உடலை வன விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விட்டனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, "யானை இறந்து 10 தினங்கள் ஆகியிருக்கலாம். உடல் அழுகிய நிலையில் இருந்தது. வனவிலங்குகள் யானையின் உடலை தின்றிருந்தன. சுமார் 15 வயதுக்கு உட்பட்ட ஆண் யானை உணவு நீர் உண்ணாமல் வறட்சியின் காரணமாக இறந்துள்ளது" என்றனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...