பாரதியார் பல்கலை., முன்னாள் துணைவேந்தர் கணபதி ஜாமினில் விடுதலை

பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

கோவை : பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.



கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முன்னாள் துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, கணபதி சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்,  நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்க நீதிமன்றம் அனுமதியளித்தது. அதாவது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். கோவையை விட்டு வெளியே செல்லக்கூடாது. சாட்சியங்களைக் கலைக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதைத்தொடர்ந்து, முன்னாள் துணை வேந்தர் கணபதி ஜாமினில் இன்று வெளியே வந்தார். அப்போது, அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் எதுவும் பேச தயாராக இல்லை எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.  இதனிடையே, பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட பேராசிரியர் தர்மராஜும் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...