இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திருப்பூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அறநிலையத்துறை அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அறநிலையத்துறை அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.வி.ஆர். நகர் மற்றும் செல்லம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களின் குடியிருப்புகள் அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனவும், ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் உடனடியாக காலி செய்யவேண்டும் எனக் கூறி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தலைமையில் பொதுமக்கள் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

அப்போது, தாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதிகளில் குடியிருந்து வருவதாகவும், தற்போது அறநிலையத்துறை நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இடத்தை தங்களுக்கே கிரயம் செய்து வைக்குமாறு அவர்கள் அரசுக்குக் கோரிக்கையையும் விடுத்தனர். பொதுமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...