குட்டை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட இருவர் பலி

பல்லடம் அருகே ஆறாக்குளம் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: பல்லடம் அருகே ஆறாக்குளம் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். அப்பகுதியிலுள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் மூவேந்தர்.

இந்நிலையில், நேற்று அவர்கள் இருவரும் விளையாடுவதற்காகச் சென்றனர். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் இருவரையும் தேடி கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து, பல்லடம் அருகேயுள்ள ஆறாக்குளம் குட்டையில் இன்று காலை இருவரின் சடலம் மிதப்பதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற, பல்லடம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரது சடலங்களையும் மீட்டனர்.



விசாரணையில் இறந்தது பள்ளி மாணவர் ஜெயபிரகாஷ், மற்றும் அவரது நண்பர் மூவேந்தர் என்பது தெரிய வந்தது.

மாணவர்கள் மீன்பிடிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் குட்டையில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். குட்டையில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...