வறட்சியை எதிர்கொள்ள வன விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் பணி தீவிரம்

கோவை வனப்பகுதியில் ஏற்பட்டுவரும் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை.

கோவை: கோவை வனப்பகுதியில் ஏற்பட்டுவரும் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை. 

இது குறித்து மாவட்ட வன அலுவலர் என்.சதீஷ் கூறுகையில், "கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 105 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதனை முறையாக பராமரித்து வருகின்றனர். வறட்சியின் போது வன விலங்குகள் காட்டுப் பகுதியை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருப்பதற்காகவும், சீதோஷன நிலை சீராக இருக்கவும், முதற்கட்டமாக பத்து ஹெக்டேர் நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கோடை மழை கிடைக்கும் வரையில் தொட்டிகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் வன விலங்குகளுக்குப் பயன்படும். இந்த கோடை மழை 130 மில்லி மீட்டர் வரை மழையைத் தரும் என்று வேளாண் பலகலைக்கழகம் கணித்துள்ளது. இருந்த போதும் வரு மே மாதம் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், 38.5 டிகிரி வரை வெப்பம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தேவையான பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...