கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி : கமல்ஹாசன்

திருச்சியில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி : திருச்சியில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க உள்ளதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 



மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் சிறப்புக் கூட்டம் நடந்தது. இதில், அதன் தலைவர் கமல் கலந்து கொண்டு பேசியதாவது :- தாய் சொல்லை தட்டாதவன் நான். அதனால், தான் மேடையில் இருக்கிறேன். வீரத்தின் உச்சம் தான் அகிம்சை, தமிழகத்தின் நலனும் வளமும் தான் எங்கள் முதல் கொள்கை. எந்த விஷயத்திலும் மையத்தில் இருந்து பார்த்தால் தான் நீதியும், நியாயமும் தெரியும். எனக்கு பெண்களை பற்றி என்ன தெரியும் என கேட்கிறார்கள். எனக்கு சேலை கட்ட தெரியும் என்பதை மீசை முறுக்கி சொல்வேன். 

180 நாளில் கட்சி கொள்கை குறித்த புத்தகம் வெளியிடப்படும். தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால், இது போதாது, இன்னும் உயர வேண்டும். தமிழகத்தில் 3.60 கோடி பெண்கள் பிறக்காமலேயே இறந்து போய் உள்ளனர். திருச்சியில் இறந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளேன். ஓட்டுச்சாவடி என்பது கோவில் போன்றது. கயவர்களுடனும், திருடர்களுடனும் என்றும் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்கிறேன், இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...