ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாகக் கூறப்படுவது பொய் : ஜெ., கார் ஓட்டுநர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாகக் கூறப்படுவது தவறானது என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பன் கூறி உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாகக் கூறப்படுவது தவறானது என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பன் கூறி உள்ளார். 

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணை நடந்து வருகிறது. முன்னாள், இந்நாள் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என அவரின் மரணத்தில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் இவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராகப் பணியாற்றிய அய்யப்பன் இன்று ஆஜரானார். விசாரணை முடிந்து திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 1991 முதல் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராகப் பணியாற்றி கொண்டிருந்தேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் சிகிச்சை முடிந்து மருத்துவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன். 75 நாளும் மருத்துவமனையில் தான் இருந்தேன், ஆனால் 3 முறை தான் ஜெயலலிதாவைப் பார்த்தேன். ஜெயலலிதாவை சசிகலா நன்றாக கவனித்து கொண்டார். நவம்பர் 19-ம் தேதி வார்டுக்கு மாற்றும் போதும் ஜெயலலிதாவை சந்தித்தேன். ஜெயலலிதாவின் கால்கள் எதுவும் அகற்றப்படவில்லை எனக் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...