எச்.ராஜா வழிகாட்டுதலின் பேரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: எச்.ராஜா வழிகாட்டுதலின் பேரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்று தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், " வன்முறையை யார் தன் கையில் எடுத்தாலும் தவறு. வன்முறையை ஆதரிப்பது பா.ஜ.க.வின் கொள்கை அல்ல. இதனைச் செயல்படுத்தியவர்கள் மீதும், இச்சம்பவத்திற்கு மூளையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடந்த வாரம், தமிழத்தில் தீவிரவாதம் அழியவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். அதற்கு, துணை முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார். ஆனால், தற்போது நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதனை நிரூபித்துள்ளது.
இத்தகையவர்கள் மீது வாக்கு வங்கிகளுக்காகத் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்துடைப்புக்காக சிலரை கைது செய்து வழக்கை முடிக்காமல், ஒட்டுமொத்த சதியை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
எச்.ராஜா கூறித்தான் பெரியார் சிலை உடைக்கப்பட்டது என்றால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்." என்றார்.