பணியிழப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஏர்செல் ஊழியர்கள் போராட்டம்

திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ள ஏர்செல் நிறுவனம், உரிய பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அதன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ள ஏர்செல் நிறுவனம், உரிய பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அதன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தங்கள் நிறுவனத்தின் டவர்கள் இல்லாத பகுதியில் வாழும் சந்தாதாரர்களுக்கு தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கிவந்த வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை செலுத்தாதால் ஏர்செல்லுக்கு அளித்துவந்த மாற்று வசதியை அந்நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. இதனால், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் சில மாநிலங்களில் வாழும் ஏர்செல் சந்தாதாரர்கள் சமீபத்தில் கடும் அவதிக்குள்ளாகினர். 

இதனிடையே, தங்களை திவால் ஆன நிறுவனமாக அறிவிக்க வேண்டும் என தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் மனு செய்துள்ளது. இந்த மனு நாளை (மார்ச் 07) விசாரணைக்கு வர இருக்கிறது. 

இந்த நிலையில், கோவை மாவட்டம் ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஏர்செல் தமிழக தலைமை அலுவலகத்தில் அதன் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, அவர்கள் கூறியதாவது, எந்தவித முன்னறிவிப்பின்றி ஏர்செல் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நிறுவனத்தின் நிலைமை குறித்து எந்த விவரமும் ஊழியர்களுக்கு தெரிவிக்காமல், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றே கூறி வருகின்றனர். ஆனால், ஏர்செல்லின் இந்த நடவடிக்கையால் சுமார் 30,000 ஊழியர்கள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். 

எனவே, நீண்ட காலமாக பணியில் இருந்த ஊழியர்கள், ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்த பணியாளர்களுக்கு பணியிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., பிஃஎப் போன்ற பிடித்தத் தொகைகளை வழங்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...