சூலூர் வட்டாரத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள் : அச்சத்தில் பொதுமக்கள்

கோவை சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை: கோவை சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சூலூரில் வசித்து வரும் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் ரங்கசாமி. கடந்த சனிக்கிழமை உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு ரங்கசாமி தனது குடும்பத்துடன் சென்றார். மறுநாள் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகை, டிவி மற்றும் மைக்ரோ ஓவன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

அதே போல், கடந்த ஞாயிற்றுக் கிழமை காங்கேயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவரது வீட்டின் கதவை உடைத்து ரூ. 80,000 மற்றும் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இந்த இரு வேறு சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிந்தாமணிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது இரும்பு கடையின் பூட்டை உடைத்து நேற்று இரவு ரூ.2.5 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சூலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...