விளாங்குறிச்சியில் வீணாகுது குடிநீர்

விளாங்குறிச்சி அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: விளாங்குறிச்சி அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை விளாங்குறிச்சியில் இருந்து காளப்பட்டி சாலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த தண்ணீர் காளப்பட்டி பகுதி 33, 34, 35 மற்றும் 36 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக வெளியேறும் குடிநீர் ஆறு போல ஓடி அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது.



இது குறித்து சமூக ஆர்வலரான செல்வராஜ் கூறும்போது, "மேற்குறிப்பிட்ட வார்டுகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தினமும் இந்த உடைப்பின் காரணமாக பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. மேலும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை பற்றாக்குறை ஏற்படும் நிலையில் அதிகாரிகளிடம் முறையிட்டால் மெத்தனமான பதில் தருகிறார்கள். இது வேதனை அளிக்கிறது. குடிநீர் வீணாவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...