சிரியாவில் நடைபெற்று வரும் மனிதப் படுகொலைகளை கண்டித்து திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருப்பூர் : சிரியாவில் நடைபெற்று வரும் மனிதப் படுகொலைகளை கண்டித்து திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் - காங்கயம் சாலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சிரியாவில் நடைபெற்று வரும் மனித படுகொலைகளை கண்டித்து மாவட்ட தலைவர் ஹைதர் அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும், ஐ.நா. சபை இந்த மனித உரிமை மீறல் விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிரியா விவகாரத்தில் இந்திய அரசு அமைதி காப்பதை தவிர்த்துவிட்டு சிரியா மக்களின் பாதுகாப்பிற்க்காக குரல் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சிரியா அதிபரின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். உடனடியாக அங்கு இருந்த போலீசார் உருவ பொம்மையை அப்புறப்படுத்த முயன்ற போது, இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உருவபொம்மையை பறித்த போலீசார் ஓடும் பேருந்தில் ஏறி தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிரியா அதிபரின் உருவப்படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.