ஒப்பந்த மின்வாரிய தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி மனு

மின்வாரியத் துறையில் ஒப்பந்த முறையில் பணி செய்யும் ஊழியர்களை பணிநிரந்தர செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை : மின்வாரியத் துறையில் ஒப்பந்த முறையில் பணி செய்யும் ஊழியர்களை பணிநிரந்தர செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



கடந்த 1998-ம் ஆண்டு முதல் இன்று வரை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரியப் பிரிவு அலுவலகங்களிலும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக மின்பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்தவொரு பணிபயனும் வழங்கக் கூடாதென முடிவு செய்தது. இதற்காக 31.06.2008-ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் மின்வாரிய பணிவிபரக்குறிப்பான ஏ.இ. சான்றிதழ், பி.சி.பி, சிட் ஒப்பந்தம், கே-2 ஒப்பந்தத்தில் வேலை செய்துள்ளதால் தங்களை மின்சார வாரிய நிர்வாகம் பணிநிரந்தரம் செய்திருக்க வேண்டும். 

இந்த நிலையில், ஒப்பந்த புள்ளிகள் பெற்ற ஒப்பந்ததாரரின் மூலமாக மின்சார வாரியத்தில் நேரடியாகப் பணிகள் வழங்கப்படுகின்றன. மின் ஒப்பந்தப்புள்ளி பெற்ற ஒப்பந்ததாரரின் பணி முடிவுற்ற பின்பு மறு ஒப்பந்ததாரரின் பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. 1985-ம் ஆண்டிற்குப் பிறகு பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்பந்ததாரரின் மூலம் பணி செய்தவர்களை காலித் ஆணையத்தின் தீர்வின்படி தினக்கூவி அடிப்படையிலோ அல்லது சி.எல்.ஆர். டி.சி.எல்., முஷ்தூர் அல்லது கள உதவியாளர்களாகவோ பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். மேலும், மின்வாரிய ஆணை எண்-9, நாள் 09/10/2010-ன்படி பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள போது அடையாளம் காணப்பட்ட ஒப்பந்த ஊழியராகக் கணக்கில் கொண்டு மின்வாரிய ஆணை எண்:110ன் படி ரூ. 1,500 கருணைத்தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...