உறவினர் போல் திருமணத்திற்கு வந்து நகை பணத்தை சுருட்டிய மர்ம நபர்கள் : போலீசார் விசாரணை

கோவை அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு உறவினர் போல் வந்த மர்ம நபர்கள் ரூ.50 ஆயிரம் பணம், 5 செல்போன்கள் மற்றும் சிங்கப்பூர் வீசா ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை : கோவை அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு உறவினர் போல் வந்த மர்ம நபர்கள் ரூ.50 ஆயிரம் பணம், 5 செல்போன்கள் மற்றும் சிங்கப்பூர் வீசா ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். 

கோவை பீளமேட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது மணமகனின் தாய் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம், சிங்கப்பூர் செல்ல வைத்திருந்த விசா மற்றும் உறவினர்கள் வைத்திருந்த 5 செல்போன்கள் மாயமாகின. இது தொடர்பாக போத்தனூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் மண்டபத்திற்கு சென்ற போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது, உறவினர்கள் போல வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் சேலம் பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதும் தெரியவந்தது. 

அந்த வாகனம் சேலத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமானது என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உறவினர் போல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...