பசுந்தேயிலைக்கு உரிய விலை வேண்டி நீலகிரியில் போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயமாக ரூ.30 வழங்கக்கோரிய இறுதி போராட்டம் இன்று அதிகரட்டி பகுதியில் நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயமாக ரூ.30 வழங்கக்கோரிய இறுதி போராட்டம் இன்று அதிகரட்டி பகுதியில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை பிரதான விவசாயமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள தேயிலை தூள் உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், பசுந்தேயிலைக்கு ரூ.30 விலை கோரி இன்று இறுதி கட்ட போராட்டம் அதிகரட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலகொலா அருகே உள்ள மகாலிங்கா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு நடைபெற்றது.



இப்போராட்டத்தில் மணியட்டி, நுந்தளா, அதிகரட்டி, பால கொலா, தாம்பட்டி, உள்ளிட்ட 7 கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், "அரசு தேயிலை தொழிற் சாலை நிர்வாகம் மிகவும் சீர்கேடாக உள்ளது. இதனால் இத்தொழிற்சாலைகளின் நிர்வாகத்தால் இந்த கூட்டுறவு தொழிற்சாலைகள் நலிவடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விவசாயிகளுக்கு விலை கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் உதகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ.2 மானியம் அளிப்பதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை எங்களுக்கு மானியம் கிடைக்கவில்லை எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...