கோவை மக்கள் அனைவரும் "பயோ" பைகளை பயன்படுத்த வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர்

கோவை மக்கள் அனைவரும் வரும் "பயோ" பைகளை பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மக்கள் அனைவரும் வரும் "பயோ" பைகளை பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதிக்காத பையோ பைகளை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் இன்று அறிமுகம் செய்தார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், "இயற்கை முறையில் மக்கும் பைகளின் பயன்பாடு நகரின் பெரும்பாலான உணவகங்களில் தொடங்கிவிட்டது. கோவையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக உள்ள பைகளை பயன்படுத்த பொதுமக்களும், வியாபாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் தற்போது இந்த "பயோ" பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் போது இந்த பைகளை கேட்டுப் பெற வேண்டும். மேலும், இயற்கையை பாதிக்காத இந்த பையோ பைகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத நகரை உருவாக்க முடியும்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...