புதிய கட்டிடங்களுடன் உதகை உழவர் சந்தை: குறைகள் இருப்பதாக குற்றச்சாட்டு

புதிய கட்டிடங்களுடன் தயாராகி வரும் உதகை உழவர் சந்தையில் பல்வேறு குறைகள் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி: புதிய கட்டிடங்களுடன் தயாராகி வரும் உதகை உழவர் சந்தையில் பல்வேறு குறைகள் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

உதகை உழவர் சந்தையில் ரூ.26.38 லட்சம் மதிப்பில் 20 கடைகள், மேற்கூரைகள் மற்றும் மின்னணு தராசுகளுக்கு சார்ஜ் செய்யும் இடம் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது.

உதகை உழவர் சந்தையில் தற்போது 62 கடைகள் உள்ளன. இது தவிர ஏராளமான விவசாயிகள் உழவர் சந்தையின் உட்பகுதியில் உள்ள காலியான இடங்களில் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.



இந்நிலையில், தற்போது விவசாயிகளின் நலன் கருதி புதிதாக கூடுதல் கடைகளும் மழை மற்றும் அதிகப்படியான வெயில் கொளுத்தும் நேரங்களில் பொது மக்களும் விவசாயிகளும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மேற்கூரைகளும் அமைக்கும் பணியில் உழவர் சந்தை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி உழவர் சந்தை நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி தொடர்பாக பிரகாஷ் என்ற விவசாயி கூறுகையில், "உழவர் சந்தை நிர்வாகம் சாரியான பணியை மேற்கொண்டாலும் இந்த பணியில் ஒரு சில குறைபாடுகள் உள்ளது. அதனை சாரி செய்ய நிர்வாக தரப்பில் கவனம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மேற்கூரை அமைத்த பகுதிகளில் போதிய இடைவெளியோடு வெளிச்சம் தரக்கூடிய மேற்கூரைகள் அமைக்காத காரணத்தால் இருள் சூழ்ந்த தன்மை உள்ளது. மேலும், புதிதாகக் கட்டப்பட்ட கடைகள் ஒற்றைச் செங்கல் முறையில் கட்டப்பட்டுள்ளதால் போதிய பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லை." என்றார். 

இது குறித்து உழவர் சந்தை நிர்வாகத்திடம் கேட்டபோது, "பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. குறிப்பிட்டுள்ள குறைபாடுகளை பணிகள் நிறைவு பெறுவதற்குள் சாரி செய்துவிடுவோம்." என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...