திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

திருப்பூர் முதலியாளையம் பகுதியில் மாநகராட்சி சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 6 ஏக்கர் நில பரப்பளவில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



இதனால், 5 கி.மீ. தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. தீவிபத்து ஏற்பட்டதற்கு இதுவரை மாநகராட்சி எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இந்த புகையினை சுவாசிப்பதால் மூச்சுத் திணறல், உடல் உபாதைகள் ஏற்பட கூடிய நிலைமை வந்ததுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாடினர். 

தற்போது, தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள காரணத்தால் மாநகராட்சியின் பாதாள சாக்கடை கழிவு நீரை கொட்டி தீயை அணைக்கும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.



நேற்று இரவு சில சமூக விரோதிகளால் தீயை கொளுத்தியிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...