கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் மகளிடம் நகை பறிப்பு

கோவையில் சீருடையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகளிடம் இருந்து மர்ம நபர்கள் ஒரு சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

கோவை: கோவையில் சீருடையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகளிடம் இருந்து மர்ம நபர்கள் ஒரு சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

உக்கடம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணி புரிபவர் வெள்ளியங்கிரி. இவரது மகள் லாவண்யா.

இன்று காலை தனது மகளை சென்னை அனுப்பி வைப்பதற்காக ரயில் நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது பி.ஆர்.எஸ் மைதானம் முன்பு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் லாவண்யாவின் கழுத்தில் இருந்த 1 பவுன் நகையை பறித்துச் சென்றார்.

காவலர் குடியிருப்பின் அருகில், காவல்துறையை சேர்ந்த ஒருவர் சீருடையில் இருந்தபோதே நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தொடர்ந்து இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...